தமிழ் மக்களின் தீர்மானம் அரசியல் ரீதியான முடிவே தவிர இன ரீதியானதல்ல -  செல்வம் அடைக்கலநாதன் 

Published By: Vishnu

18 Nov, 2019 | 06:24 PM
image

பெருமளவான தமிழ்மக்களால் கோத்தாபய ராஜபக்ஷ நிராகரிக்கப்பட்டாலும் இன்னுமொரு பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவருக்கே தமிழ் மக்கள் வாக்களித்திருந்தார்கள். இது அரசியல் ரீதியான முடிவே தவிர இன ரீதியானதல்ல என்பதை புதிய ஜனாதிபதி புரிந்து கொண்டு ஒட்டுமொத்த நாட்டின் ஜனாதிபதி என்பதனை ஏற்றுக்கொண்டு எதிர்காலத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருக்கிறார். 

இன்று அவர் வெளியிட்டுள்ள விஷேட ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

நிறைவடைந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றி பெற்று ஏழாவது ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார். 

இத்தேர்தலின் முடிவுகள் தமிழ் மக்கள் தமது ஜனநாயகக் கடைமையை ஒற்றுமைப்பட்டு வெளிப்படுத்தியுள்ளமையையும் , என்னென்ன காரணங்களுக்காக சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிக்க வேண்டுமென தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) மக்களை உரிமையோடு கேட்டுக் கொண்டதோ அக்காரணங்கள் அனைத்தும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதையும் வெளிப்படுத்தியுள்ளது. 

தமிழ் மக்களில் மிகப்பெரும்பான்மையானவர்களின் உணர்வுகளும் உள்ளக்கிடக்கைகளும் ஒவ்வொரு வாக்குகளினாலும் உலகத்துக்கு உணர்த்தப்பட்டுள்ளது. எமது மக்களின் நீண்டகால அபிலாசைகள், தீர்த்து வைக்கப்படாத அன்றாட பிரச்சினைகள், கேள்விகளுக்குள்ளாக்கப்பட்டுள்ள எதிர்கால வாழ்வு என இவையெல்லாம் ஏமாற்றங்களாக தொடர்வதின் நீட்சியே வாக்குகளுடாக பிரதிபலிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பெரும்பானமை சிங்கள மக்களின் நிலைப்பாடானது தமிழ் மக்களின் நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்டு நிற்கின்றது. காலம் காலமாக சிங்கள தலைமைகள் தமிழ் மக்களின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் ஏமாற்றிக் கொண்டிருப்பதும் உதாசீனப்படுத்துவதும் தெரிந்தும் பெரும்பான்மை இனம் துணை நிற்பது வருத்தமானதே. 

சிங்கள தலைமைகள் சிங்கள பெரும்பான்மை இன மக்களை தவறாக வழிநடத்திக் கொண்டு அரசியல் நன்மைகளை அனுபவிக்கவே விரும்புகின்றார்கள். ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிங்கள தேசம் அனுபவிக்கின்ற அனைத்து உரிமைகளையும் தமிழ் மக்களும் அனுபவிக்க வேண்டும், என கோருவதில் தவறொன்றும் காணமுடியாது. 

புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும் சிங்கள மக்களும் இதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களதும் தெற்கின் சிங்கள மக்களதும் சம காலத்து தேவைகள் வேறு வேறானவை என்பது தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கின்றது. வெவ்வேறான பார்வைகளினூடாகவும், அணுகுமுறைகளினூடாகவுமே தமிழ் சிங்கள மக்களின் பிரச்சினைகள் ஆராயப்பட்டு தீர்க்கப்பட வேண்டும். 

புதிய ஜனாதிபதி தனது 5 வருட பதவிக்காலத்தில் இயலுமான வரை கடந்த அரசாங்கங்கள் விட்ட தவறுகளை பாடமாக்கி கொண்டு திருத்தங்களுடன் பயணித்தால் நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் வாழ்வுண்டு என கருதுவதாகவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38