மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறுகளை, தடைகளை ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்.மாவீரர் தினம் அன்று காலை 9 மணிக்கு நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக மாவீரர் தின அனுஸ்டிப்பு ஆரம்பமாகும். 

மாலை 6.05 கீதங்கள் இசைக்கப்பட்டு நாம் அஞ்சலி செலுத்துவோம். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாவீரர் நாளினை வடக்கு கிழக்கில் அனுஸ்டிக்க அனுமதிக்க மாட்டேன் என்று தனது தேர்தல் பிரச்சார காலத்தில் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தார். எனினும் அவருக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவெனில் மாவீரர் நாளினை அனுஸ்டிப்பதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை.

ஆகவே கோத்தாபயவிடம் அனுமதியை நாம் கேட்கவில்லை.ஆனால் இதற்கு இடையூறாக அரச தரப்பு இருக்க வேண்டாம்.தடங்கல்களை ஏற்படுத்த வேண்டாம்.என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.இதனை மீறி அரசாங்கம் இடையூறுகளை,தடைகளை ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்.மாவீரர் தினம் அன்று காலை 9 மணிக்கு நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக மாவீரர் தின அனுஸ்டிப்பு ஆரம்பமாகும்.

பின்னர் அனைத்து இடங்களிலும் உணர்வுபூர்வமாக அனுச்டிகபடும்.எந்த இடத்திலாவது மாவீரர் துயிலும் இல்லங்கள் துப்பரவு செய்யும் பணிகள் தடை செய்யப்பட்டால் உடனடியாக எனக்கு தெரியப்படுத்துங்கள்.உடனடியாக நான் அந்த இடத்துக்கு வந்து நான் அந்த துப்பரவு பணிகளுக்கு ஆதரவு கொடுப்பேன்.இந்த தடைகள் உடைத்தெறியப்பட்டு மாலை 6.05 கீதங்கள் இசைக்கப்பட்டு நாம் அஞ்சலி செலுத்துவோம்.

தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்த அத்தனை மாவீரர்களையும் நினைவு கூறுவோம்.விடுதலைக்காக போராடிய அனைவரையும் நெஞ்சில் இருத்தி நினைவு கூறுவோம்.மக்களோடு மக்களாக அனைவரும் உணர்வு பூர்வமாக மாவீரர்  தினம் அனுஸ்டிக்கப் படும்.என்றார்.