பிரான்ஸ் நாட்டின் துலூஸின் வடகிழக்கில் mirepoix sur tarn என்ற இடத்திற்கு அருகே உள்ள பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் மீட்கப்பட்டுள்ளனர்.

ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்ட இந்த பாலத்தின் மீது கனரக வாகனம் ஒன்று பயணித்ததன் காரணமாக இந்த அனர்த்தம் அந் நாட்டு நேரப்படி இன்று காலை 8.30 மணியளவில் ஏற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

150 மீற்றர் நீளமும், 5 மீற்றர் அகலமும் கொண்ட இந்தப் பாலமானது கடந்த 2003 ஆம் ஆண்டு புனர் நிர்மாணம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.