கோவை சரளா மற்றும் பல புது முகங்களுடன் தயாராகவுள்ள புதிய படத்திற்கு ‘ஒன் வே’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

‘மைதானம்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் எம் எஸ் சக்திவேல் இயக்கத்தில் தயாராகி வரும் ‘ஒன் வே’. படத்தில் வங்காள நடிகரான பருண் சந்தா, கௌதம் ஹோல்டர், ‘மெட்ராஸ்’ பட புகழ் சார்லஸ் வினோத், சசி, ரவீந்திரா, நடிகை திவ்யகானா ஜெயின் மற்றும் கோவை சரளா ஆகியோர் நடிக்கிறார்கள். 

இந்தப்படத்தின் மூலம் நடிகர் பிரபஞ்சன் எனும் இளம் நாயகன் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் பிரபல நடிகை குஷ்புவின் சகோதரர் அப்துல்லா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு முத்துக்குமரன் ஒளிப்பதிவு செய்ய, அஸ்வின் ஹேமந்த் என்ற புதிய இசை அமைப்பாளர் இசையமைக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில்,“ இந்தப் படம் விவசாயிகளின் ஒரு வழி பாதை கொண்ட வாழ்க்கையை யதார்த்தமாக விவரிக்கும் திரைப்படம். விவசாயிகள் நகரங்களை நோக்கி அதாவது கிராமப்புறத்தை கைவிட்டு நகரத்தை நோக்கி பயணிப்பதன் மூலம் அவர்கள் எதை சந்திக்கிறார்கள்? எதையெல்லாம் இழக்கிறார்கள்? என்பதை யதார்த்ததுடன் விவரிக்கும் திரைப்படம்தான் ஒன் வே. இந்தப்படத்தில் கதையின் நாயகன் நான் விவசாயி. சென்னையிலிருந்து மும்பைக்கு புலம்பெயருகிறான். அவன் சந்திக்கும் நடைமுறையிலான அனுபவங்கள்தான் இந்தப்படத்தின் திரைக்கதை.” என்றார்.

புதிய கதை களத்தில், புதுமையான திரை உத்திகளுடன் சொல்ல வந்திருக்கும் ‘ஒன் வே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்றைய திகதியில் சுட்டி குழந்தைகளின் மனம் கவர்ந்த நடிகையாக வலம்வருகிறார் மூத்த நடிகை கோவை சரளா . காஞ்சனா மற்றும் தேவி படங்களின் அடுத்தடுத்த பாகங்களில் நடித்து இளம் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர், ஒன்வே படத்தில் கதை நாயகனுக்கு அம்மாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.