பதுளையில் நடைபெற்ற புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு வெற்றி விழாவிலும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தின விழாவிலும் பங்குபற்றி வீடு திரும்பிய கார் ஒன்று பாதையை விட்டுவிலகி 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த விபத்திர் பதுளை இ.போ.ச பஸ் சாரதியான 48 வயது நிரம்பிய நிமல் திசாhநாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இவ்விபத்துக்குள்ளான காரில் பயணித்த ஏனைய மூவர் கடும் காயங்களுக்குள்ளாகி பதுளை அரசினர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து பதுளை பொலிசார் இவ்விபத்துக் குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.