மெகா பொலிஸ், மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அத்துடன் போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தினை இன்று மாலை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதேவேளை அமைச்சர்களான மங்கள சமரவீர, கபீர் ஹாசிம், மலிக் சமரவிக்ரம ஆகியோரும் இராஜாங்க அமைச்சரான ருவான் விஜேவர்தனவும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரான அஜித் பி பெரேரா ஆகியோரும் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.