2020 ஆம் ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தையொட்டி, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த பதினொரு வருடங்களாக விளையாடிய இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்கவை தக்கவைத்துக் கொள்ள அந்த அணி தீர்மானித்துள்ளது.

இதேநேரம், நான்கு தடவைகள் ஐ.பி.எல் சம்பியனாகத் தெரிவாகிய மும்பை அணி, இம்முறை தமது அணியில் இருந்து 12 வீரர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்திருப்பதுடன், கடந்த வருடம் அந்த அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பதற்கு காரணமாக இருந்த 18 வீரர்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும் தீர்மானித்துள்ளது.

ஐ.பி.எல் தொடரின் 2020 ஆம் ஆண்டின் பருவத்துக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19 ஆம் திகதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. 

ஏலத்திற்கு முன்பு எட்டு அணிகளும் தங்களுக்கு விருப்பப்பட்ட வீரர்களை வெளியேற்றலாம். அதேபோல் மற்ற அணிகளிடம் இருந்து வாங்கிக் கொள்ளலாம். இதற்கான காலக்கெடு கடந்த 14ஆம் திகதி முடிவடைந்தது.

இந்நிலையில், அண்மையில் எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை வெளியேற்றியுள்ளது மற்றும் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்ற விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. 

இதில் ஐ.பி.எல் தொடங்கிய காலத்திலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இலங்கையைச் சேர்ந்த ஒரேயொரு வீரரான லசித் மாலிங்கவை தொடர்ந்து அந்த அணியுடன் தக்கவைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள்: 

ரோஹித் ஷர்மா, ஹர்டிக் பாண்ட்யா, ஜஸ்பிரீத் பும்ரா, குருணல் பாண்ட்யா, இஷான் கிஷன், சூர்யா குமார் யாதவ், ராகுல் சஹார், அன்மோல்பிரீத் சிங், ஜெயந்த் யாதவ், ஆதித்யா தாரே, அனுகுல் ராய், தவால் குல்கர்னி (Traded in) கீரோன் பொல்லார்ட், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் (Traded in), லசித் மலிங்கா, மிட்செல் மெக்லெனகன், ட்ரெண்ட் போல்ட் (Traded in).

மும்பை இந்தியன்ஸ் விடுவித்த வீரர்கள்: 

இவன் லூயிஸ், ஆடம் மில்னே, ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப், பியூரன் ஹென்ட்ரிக்ஸ், பென் கட்டிங், யுவராஜ் சிங், மாயங்க் மார்க்கண்டே (Traded out), பாரிந்தர் ஸ்ரான், ராசிக் சலாம், பங்கஜ் ஜஸ்வால், சித்தேஷ் லாட் (Traded out), அல்சாரி ஜோசப்.

சென்னை சூப்பர் கிங்ஸ் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள்: 

எம்.எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன், டு பிளெசிஸ், முரளி விஜய், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, ரிதுராஜ் கெய்க்வாட், டுவைன் பிராவோ, கர்ன் ஷர்ஹா, ஹர்ன் சிர்ஜ் , மிட்செல் சாண்ட்னர், ஷர்துல் தாக்கூர், கே.எம். ஆசிப், டேவிட் வில்லி, தீபக் சஹார், என் ஜெகதீசன் 

சென்னை சூப்பர் கிங்ஸ் விடுவித்த வீரர்கள்: 

மோஹித் ஷர்மா, சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லி, துருவ் ஷோரே, சைதன்யா பிஷ்னோய்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள்: 

ஷிகர் தவான், பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ஆக்சர் படேல், அமித் மிஸ்ரா, இஷாந்த் ஷர்மா, ஹர்ஷல் படேல், அவேஷ் கான், ரவிச்சந்திரன் அஸ்வின், அஜிங்க்யா ரஹானே, ககிசோ ரபாடா, கீமோ பால், சந்தீப் லாமிச்சேன்

டெல்லி கேப்பிட்டல்ஸ் விடுவித்த வீரர்கள்: 

ஹனுமா விஹாரி, ஜலஜ் சக்சேனா, மஞ்சோத் கல்ரா, அங்குஷ் பெய்ன்ஸ், நாது சிங், பண்டாரு அயப்பா, கிறிஸ் மோரிஸ், கொலின் இங்க்ராம், கொலின் மன்ரோ.