வாழைச்சேனை பகுதியில் புத்தம் புதிய துவிச்சக்கர வண்டி ஒன்றை திருடி ஐநூறு ரூபாய்க்கு விற்பனை செய்த இளைஞன் ஒருவர் சிக்கிய சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை பகுதியில் மீனவர் ஒருவர் அவருடைய சைக்கிளை ஆற்றோரம் நிறுத்திவிட்டு மீன் பிடிக்கச் சென்ற போது அதனை அப்பகுதியிலுள்ள இளைஞன் ஒருவன் திருடியுள்ளான்.

குறித்த சைக்கிளை திருடும் காட்சி அப்பகுதியிலுள்ள சீ.சீ.ரீ.வி கமெராவில் பதிவாகியுள்ளன. பதிவாகிய ஒளிப்பதிவின் உதவியுடன் குறித்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு இருபதாயிரம் ரூபாய் பெறுமதியான சைக்கிளை ஐநூறு ரூபாக்கு விற்பனை செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

குறித்த பகுதிகளில் அண்மைக்காலமாக திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 

குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளைமை குறிப்பிடத்தக்கது.