1.540 கிலோ கிராம் தங்கத்துடன் மூன்று இந்தியப் பிரஜைகள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சென்னை செல்ல முயற்சித்தபோதே அவர்கள் மூவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 29, 32 மற்றும் 34 வயதுடையவர்கள் எனவும் மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.