லண்டனில் நடைபெற்ற ஏ.டி.பி இறுதி டென்னிஸ் தொடரில், இளம் வீரர் சிட்சிபாஸ் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

உ‌லகத் டென்னிஸ் தரவரிசையில்‌ முதல்‌ 8 ‌இடங்களில்‌ உள்ள முன்‌னணி வீரர்கள் பங்கேற்ற ஏடிபி இறுதி தொடர் லண்டனில் நடைபெற்றது. 

இதில் டென்னிஸ் ஜாம்பவான்கள் ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், கிரிஸைச் சேர்ந்த ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். 

நேற்று இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில், டொமினிக் தீம்க்கு, 21 வயதான இளம் வீரர் சிட்சிபாஸ் கடும் சவால் அளித்தார்.

முதல் செட்டில் இரு வீரர்களும், மாறிமாறி செட்களை கைப்பற்றிய நிலையில், ஆட்டம் டை பிரேக்கர் வரை சென்றது. அதில், தீம் வெற்றி பெற்றார். 

தனது அபராமான ஆட்டத்தால் 2 ஆவது செட்டை வசப்படுத்தி தீம்முக்கு அதிர்ச்சி அளித்தார் சிட்சிபாஸ். 

வெற்றியை தீர்மானிக்கும் இறுதி செட்டில் இரு வீரர்களும் விட்டுக் கொடுக்காமல் விளையாடினார். டைபிரேக்கர் வரை நீடித்த அந்த செட்டை வசப்படுத்தி, கிண்ணத்தை வசப்படுத்தினார் சிட்சிபாஸ்.