கோபம் அடைந்தமையினால் எதிரணி வீரரை திட்டிய அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சனுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் பேட்டின்சன், உள்ளூர் போட்டியின்போது குயின்ஸ்லாந்து வீரரை சரமாரியாகத் திட்டினார். இதுபற்றி நடுவர்கள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, ஒரு சர்வதேசப் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால் வரும் 21 ஆம் திகதி பிரிஸ்பேனில் தொடங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் அவர் விளையாட மாட்டார். அவருக்குப் பதிலாக ஸ்டார்க் சேர்க்கப்படுகிறார்.  

இதையடுத்து பிரிஸ்பேனில் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவர், தனது சொந்த ஊரான விக்டோரியாவுக்குத் திரும்பினார்.

அடிலெய்டில், பாகிஸ்தானுக்கு எதிராக வரும் 29 ஆம் திகதி நடக்கும் 2 வது டெஸ்ட் போட்டியில் பேட்டின்சன் பங்கேற்பார்.