(ரொபட் அன்­டனி)

இலங்­கையின் 7 ஆவது  நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ள கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்கு ஆளும் எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள்   வாழ்த்­துக்­களை தெரி­வித்­து­வ­ரு­கின்­றனர். 

நேற்­றைய தினம்   ஜனா­தி­பதி தேர்தல் முடி­வுகள் வெளி­யா­கிக்­கொண்­டி­ருந்­த­போது கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் வெற்றி உறு­தி­யா­கிய நிலையில் அமைச்­சர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்கு வாழ்த்­துக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர். 

புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர்  சஜித் பிரே­ம­தாச  நேற்றுக் காலை­யி­லேயே  கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்கு வாழ்த்­து­தெ­ரி­வித்­தி­ருந்தார். அதே­போன்று  தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ  கணே­சனும்   ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ள கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவுக்கு நேற்­றை­ய­தினம் வாழ்த்து தெரி­வித்­தி­ருந்தார். அதற்கு முன்னர்   ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின்  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்கு வாழ்த்து தெரி­வித்­தனர்.  

ஐக்­கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் நேற்றைய தினம்    கோத்தபாய  ராஜப­க் ஷவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.