புத்தளத்தில் நேற்று மாலை மூன்று குழுகளுக்கிடையே இடம்பெற்ற மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர். 

புத்தளம் - மன்னார் பிரதான வீதியிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

இந்த வன்முறை சம்பத்தில் ஈடுபட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு வேன்களையும், மேலும் ஒரு வாகனத்தையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.