எதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ 

Published By: J.G.Stephan

17 Nov, 2019 | 04:50 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எதிர்பார்த்ததை போன்று ஜனாதிபதி தேர்தலில்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெற்றுள்ளது.   கிடைக்கப் பெற்றுள்ள வெற்றியினை அனைவரும் அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மாறுப்பட்ட வழிமுறைகளில்  பல்வேறு  நெருக்கடிகள்  ஏற்படுத்தப்பட்டன. நாட்டின் எதிர்காலத்தினை கருத்திற் கொண்டு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆரம்பத்தில் இருந்து உதவி வழங்கியவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்ள வேண்டும்.

அச்சமின்றிய விதத்தில் அனைவரும் தேசிய பாதுகாப்புடன் வாழும் சூழல் இனி தோற்றுவிக்கப்படும். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள  கோத்தாபய ராஜபக்ஷவிற்கு அதற்காக  செயற்பாடுவார் என்றும் வெற்றியினை அடைவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தொடர்ந்து அவசியமாக காணப்படுகின்றதென்றும் அவர் மேலும்  தெரிவித்தார். 

அத்தோடு கடந்த காலங்களில் நாட்டில் இருண்ட யுகம் காணப்பட்டது. குறிப்பட்ட தரப்பினர் மாத்திரமல்லாமல் அனைவரும் அனைத்து விடயங்களிலும் முன்னேற்றமடைவதற்கான  வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்போம் என்றார். 

பொதுஜன பெரமுன வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56