டுபாயிலிருந்து சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை கடத்தி வந்த பெண் ஒருவரை பண்டாரநாயக்க, சர்வதச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

38 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்களின் பெறுமதி 2,251,200 எனத் தெரிவித்த சுஙகத் திணைக்கள அதிகாரிகள் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.