நாளைய தினம் பதவியேற்கும் கோத்தா!

Published By: Vishnu

17 Nov, 2019 | 04:44 PM
image

இலங்கையின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை காலை அனுராதபுரத்தில் பதவியேற்கவுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஷ டி.ஏ.ராஜபக்ஷ மற்றும் நந்தினா ராஜபக்ஷ ஆகியோரின் மகனாக 1949 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20 ஆம் திகதி வீரகட்டியவில் பிறந்தார். தனது பாடசாலைக் கல்வியை ஆனந்தா கல்லூரியில் பெற்றுக்கொண்ட கோத்தபாய ராஜபக்ஷ கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பை நிறைவுசெய்தார். அனோமா ராஜபக்ஷவை திருமணம் செய்து கொண்டதுடன், அவர்களுக்கு மனோஜ் என்ற மகனொருவர் உள்ளார்.

இலங்கை இராணுவத்தில் கடேட் அதிகாரியாக 1971 ஆம் ஆண்டில் இணைந்துகொண்ட கோத்தபாய ராஜபக்ஷ, லெப்டினன் கேணல் தரம் வரை உயர்த்தப்பட்டு 20 வருடகாலம் இராணுவத்தில் பணியாற்றினார். 1992 ஆம் ஆண்டில் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்று அமெரிக்காவிற்குச் சென்று அவரது குடும்பத்தினருடன் வசித்துவந்தார். பின்னர் 2005 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் பாதுகாப்புச் செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டு 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி வரை அப்பதவியை வகித்தார்.

இந்நிலையில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் கோதபாய ராஜபக்ஷ வேட்பாளராகக் களமிறப்பட்டார். அவர் கடந்த 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டி, இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக இன்று திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19