2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ முன்னிலையாகியுள்ளார்.

இதுவரை வெளியாகி வந்த முடிவுகளின் படி பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலைவகித்து வந்த நிலையில் தற்போது புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் தற்போது முன்னிலை வகிக்கின்றார்.

சஜித் பிரேமதாஸ தற்போது தற்போது 49 வீத வாக்குகளையும் கோத்தாபய ராஜபக்ஷ 43 வீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், தற்போது வெளியாகி வருகின்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், இரு வேட்பாளருக்குமிடையில் கடுமையான போட்டி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.