காட்டுப் பகுதியிலிருந்து கணவன் மனைவியினது சடலங்கள் மீட்பு ; மட்டுவில் சம்பவம்

By T Yuwaraj

16 Nov, 2019 | 10:57 PM
image

மட்டக்களப்பு – வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி மானாவாரிக் கண்டம் எனும் பகுதியில் இளம்  கணவன் மற்றும் மனைவி ஆகியோரின் சடலங்கள் சனிக்கிழமை பிற்பகல் 16.11.2019 மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாகதம்பிரான் கோயில் வீதி, கிண்ணையடி வாழைச்சேனை எனும் முகவரியைச் சேர்ந்த நமசிவாயம் குணம் (வயது 35) விநாயகன் தேவி (வயது 30) ஆகிய இருவரினதும் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

வாகனேரி மானாவாரிக் கண்டத்திலுள்ள வயல் வாடியில் மனைவியும் அங்குள்ள காட்டுப் பகுதியில் கணவனும் சடலமாகக் கிடைப்பதை அவதானித்த அப்பகுதியில் சென்றவர்கள் பொலிஸாருக்கும் உறவினர்களுக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

அதனடிப்படையில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் கணவன் மனைவி ஆகிய இருவரினதும் சடங்களை மீட்டுள்ளனர்.

இதையடுத்து குறித்த இருவரது சடலங்களும் உடற்கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்குக் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் பாதுகாப்புக் கருதியே உயர் பாதுகாப்பு...

2022-09-28 22:40:01
news-image

பொதுஜன பெரமுன முன்னெடுத்த திட்டங்களின் பலன்கள்...

2022-09-28 22:37:03
news-image

கெஹலியவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு...

2022-09-28 22:58:06
news-image

இலங்கையில் சிறுவர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் வயதெல்லை உயர்கிறது

2022-09-28 22:35:17
news-image

காதல் விவகாரம் ஒன்றை மையப்படுத்திய தாக்குதல்...

2022-09-28 22:59:43
news-image

வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு சர்வதேச தகவல் அறியும்...

2022-09-28 21:55:54
news-image

சம்மாந்துறையில் காட்டு யானை அட்டகாசம்

2022-09-28 22:42:45
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து...

2022-09-28 23:03:37
news-image

ஷெஹான் மாலகவுக்கு குற்ற பகிர்வுப் பத்திரம்...

2022-09-28 16:55:34
news-image

இலங்கையில் இந்தியா தனது முதலீடுகளை அதிகரிக்கும்...

2022-09-28 16:53:31
news-image

கொழும்பு - கஜீமா தோட்ட தீ...

2022-09-28 16:51:14
news-image

இந்திய பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி

2022-09-28 15:47:06