டேவிட் வோர்னர் தனி ஆளாக நின்று அடித்தாட, இறுதியில் அவருக்கு துணையாக நின்று பிபுல் ஷர்மா அதிரடிகாட்ட குஜராத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது ஹைதராபாத் அணி.
நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூர் அணியை சந்திக்கிறது ஹைதராபாத் அணி.
இறுதிச்சுற்றுக்குள் நுழையும் இரண்டாவது அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2ஆவது தகுதி சுற்றில் குஜராத் லயன்ஸும்இ ஹைதராபாத் சன் ரைஸர்ஸ் அணியும் நேற்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் மோதின.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற வோர்னர் தனது அணி முதலில் பந்து வீசும் என்று தெரிவித்தார். இதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுக்கள் விழஇ மறுமுனையில் கணிசமான ஓட்டங்களையும்
சேர்த்தபடி இருந்தது. 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது குஜராத்.
குஜராத் அணியில் அதிகபட்சமாக பிஞ்ச் 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இதையடுத்து 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக் களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
டேவிட் வோர்னர் இறுதிவரை களத்தில் நின்று அணியை வெற் றிக்கு அழைத்துச் சென்
றார். இவர் இந்தப் போட்டியில் 93 ஓட்டங்களை விளாசினர். இவரைத் தவிர இவருக்கு துணை நின்ற ஷர்மா 27 ஓட்டங்களைப் பெற்றார். ஏனைய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.
அணித் தலைவர் என்ற பொறுப்பை சரியாக
நிறைவேற்றிய வோர்னர்
ஹைதராபாத் அணியை இறுதிப்போட்டிவரை அழைத்து வந்திருக்கி றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM