‘கைதி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்திருக்கும் ‘தம்பி’ படத்தின் டீஸர் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியாகியிருக்கிறது.

‘பருத்திவீரன்’ மூலம் தமிழ் திரை ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் கார்த்தி, தன்னுடைய திரையுலக பயணத்தில் இருபத்தைந்து படங்களில் நடிப்பதற்குள் ‘கைதி’ படத்தின் மூலம், 100 கோடி ரூபாய் வசூலித்து மிக குறைவான படங்களில் நடித்து நூறு கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த முதல் நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கிறார். 

இவர் தற்போது ‘பாபநாசம்’ படத்தை இயக்கிய இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும்‘தம்பி’ படத்தின் டைட்டில்,ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ஆகியவை இன்று வெளியாகியிருக்கிறன.

இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த டீசரில், கார்த்தி தன்னுடைய சகோதரிக்காக வித்தியாசமான கெட்டப்புகளில் செய்யும் குற்றங்களை விறுவிறுப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப் என தோன்றுகிறது. சத்யராஜுன் டொயலாக்கும், ஜோதிகாவின் டொயலாக்கும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இதனிடையே ‘தம்பி’ என்ற பெயரில் ஏற்கனவே 2006 ஆம் ஆண்டில் சீமான் இயக்கத்தில் ஆர் மாதவன் கதையின் நாயகனாக நடித்து ஒரு படம் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அதே பெயரில் வெளியாகியிருக்கும் இந்த திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்விக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.