வளரிளம் பருவத்தில் இருக்கும் மாணவர்களுக்கும், இளம் பருவத்தில் இருக்கும் ஆண்களுக்கும் இன்றைய திகதியில் அவர்களது மார்பக பகுதி அசாதாரண வளர்ச்சி பெற்று, அவர்களின் சமூக சார்ந்த நடவடிக்கைகளுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

இதனால் அவர்கள் தன்னம்பிக்கை குறைந்து, வீட்டில் முடங்கி விடுகிறார்கள். இதனை களைய தற்போது நவீன சத்திரசிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது.

இத்தகையவர்களுக்கு அவர்களுடைய ஹோர்மோன் சுரப்பு மற்றும் செயல்பாட்டில் ஏற்படும் சமச்சீரற்ற தன்மையால் இத்தகைய விளைவு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். 

குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டீரோன் போன்ற ஹோர்மோன்களின் சுரப்பு மற்றும் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு காரணம் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. சிலருக்கு இத்தகைய மாற்றத்தின் காரணமாக மார்பகப் பகுதியில் வீக்கம், வலி ஆகியவை ஏற்படும். இதனை அறிகுறியாக எடுத்துக் கொண்டு இதற்கான சிறப்பு மருத்துவ நிபுணர்களை சந்தித்து ஆலோசனைப் பெறவேண்டும். 

இதற்கு மருத்துவ நிபுணர்கள் ஹோர்மோன் சுரப்பை கட்டுப்படுத்தும் மாத்திரைகளின் மூலம் இதனை குணப்படுத்த முயற்சி செய்கிறார்கள். அதன் பிறகும் இதன் பாதிப்பு தொடர்ந்தால் பிரத்யேக பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை செய்து இதன் அமைப்பை மாற்றியமைக்கிறார்கள். இதனால் அவர்களுடைய பிரச்சினைக்கு முழுமையான நிவாரணம் கிடைத்து அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. 

டொக்டர் சிவகுமார்.

தொகுப்பு அனுஷா.