(எம்.எப்.எம்.பஸீர்)
காலி - நாகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுகம - காபில் தோட்ட தமிழர்கள் வாக்களிக்கச் செல்லக் கூடாது என அச்சுறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நாகொட பிரதேச சபை ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன உறுப்பினர் ஒருவர் இவ்வாறு குறித்த தமிழ் மக்களை அச்சுறுத்தியுள்ளதாக பாராளுமன்றஉறுப்பினர் பந்துலால் பண்டாரகொட நாகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினையும் பதிவு செய்துள்ளார்.
'உங்கள் நல்லது கெட்டது என அனைத்துக்கும் வருபவன் நானே, நீங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டும்' என குறித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரதேச சபை உறுப்பினர் அச்சுறுத்தியதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி ஒருவரை தேர்ந்தெடுப்பது குறித்தான சட்டத்தின் கீழ் நாகொட பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பில் தற்போது வரை எவரும் குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM