2019 ஜனாதிபதித் தேர்தல் இன்று இடம்பெற்று வருகின்ற நிலையில், நாடளாவிய ரீதியில் வாக்குப் பதிவுகள் மிகவும் சுமுகமான முறையில் இடம்பெற்றுவருகின்றது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெற்று வருவததாகவும், வாக்களிப்பு உகந்த மட்டத்தில் காணப்படுவதாகவும் பாரதூரமான சம்பவங்கள் எதுவும் பதியப்படவில்லையென கஃபே அமைப்பின் பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் இன்று காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையான காலப்பகுதியில் வாக்குப் பதிவு ஓரளவுக்கு இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக நுவரெலியா பகுதியில் மக்கள் மழைக்கும் மத்தியில்சென்று வாக்களிப்பில் கலந்துகொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அந்தவகையில், யாழ்ப்பாணத்தில்  55 வீதமான வாக்குகளும் மன்னாரில் 56.7 வீதமான வாக்குகளும், முல்லைத்தீவில், 55.3 வீதமான வாக்குகளும்,  திருகோணமலையில் 65 வீதமான வாக்குகளும் மட்டக்களப்பில், 54.7 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், அம்பாறையில் 55 வீதமான வாக்குகளும் அனுராதபுரத்தில் 65 வீதமான வாக்குகளும் மாத்தறையில் 65 வீதமான வாக்குகளும் பதுளையில் 70 வீதமான வாக்குகளும் காலியில் 67 வீதமான வாக்குகளும் இரத்தினபுரியில் 65 வீதமான வாக்குகளும் ஹம்பாந்தோட்டையில் 70 வீதமான வாக்குகளும் பதியப்பட்டுள்ளன.

அத்துடன் வவுனியாவில் 60 வீதமான வாக்குகளும் நுவரெலியாவில் 60 வீதமான வாக்குகளும் கண்டியில் 70 வீதமான வாக்குகளும் பொலன்னறுவையில் 72 வாக்குகளும் குருநாகலில் 60 வீதமான வாக்குகளும் மாத்தளையில் 70 வீதமான வாக்குகளும் திகாமடுல்லயில் 60 வீதமான வாக்குகளும் கிளிநொச்சியில் 61 வீதமான வாக்குகளும் மொனராகலையில் 60 வீதமான வாக்குகளும் கேகாலையில் 55 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.