இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது பாரியாருடன் சென்று, தமது வாக்குகளை பதிவு செய்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு ரோயல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியின் இன்று முற்பகல் 10.20 மணியளவில் தனது வாக்குப் பதிவை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடதக்கது .