இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பாரியாருடன் பொலன்னறுவை, புதிய நகரம், ஸ்ரீ வித்தாலோக்க விகாரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில், தனது வாக்கினை இன்று முற்பகல் பதிவு செய்துள்ளார்.

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பாரியார் சாதாரணமாக மக்களோடு மக்களாக நின்று தனது ஜனநாயக கடமையினை நிறைவேற்றியமை குறிப்பிடதக்கது.