2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் மிகவும் ஆர்வத்துடனுடம் உற்சாகத்துடனும் வாக்களித்துவருவதை அவதானிக்க முடிந்துள்ளது.

இன்று காலை 7 மணி முதல் 9 மணி வரையான இரு மணித்தியாலங்களில் சுமார் 80 முதல் 85 வீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றிருக்கலாமென எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.