(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு இம்முறை புதிதாக 9 இலட்சத்து 47ஆயிரத்தி 606 பேர் தகுதி பெற்றுள்ளனர். 

இன்று இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலுக்கு 2018 வாக்காளர் பெயர்  பட்டியல் பயன்படுத்தப்படுகின்றது. 

அதன் பிரகாரம் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை ஒருகோடி 59 இலட்சத்து 92ஆயிரத்தி 96 ஆகும்.

2015 ஆம் ஆண்டு முதல் 2018 வரை 9 இலட்சத்து 47ஆயிரத்து 606 வாக்காளர்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். 

அதன் பிரகாரம் 2015 க்கு பின்னர் இம்முறை இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் புதிய வாக்காளர்களாக 9 இலட்சத்து 47ஆயிரத்து 606 பேர் மொத்த எண்ணிக்கையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் 2015 ஆம் ஆண்டில் 3 இலட்சத்து 76ஆயிரத்து 715 வாக்காளர்களும் 2016 இல் ஒரு இலட்சத்து 90ஆயிரத்து 765 வாக்காளர்களும் 2017இல் ஒரு இலட்சத்து 48ஆயிரத்து 897 வாக்காளர்களும் 2018 இல் 2 இலட்சத்து 31ஆயிரத்து 229 வாக்காளர்களும் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றனர்.