மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சாளர் சுனில் நரைனுக்கு சர்வதேசப் போட்டிகளில் பந்து வீசத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவரது பந்து வீச்சு தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தால் சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 17 ஆம் திகதி இங்கிலாந்து பல்கலைக்கழகமொன்றில் சுனில் நரைனுக்கு சோதனை நடத்தப்பட்டது.அப்போது,அவர் அனுமதிக்கப்பட்ட 15 டிகிரிக்கும் அதிகமாக கையை வளைத்துப் பந்து வீசுவது தெரியவந்துள்ளது.

இதனால், சுனில் நரைன் சர்வதேசப் போட்டிகளில் பந்து வீசுவதற்கு இன்று முதல் தடை விதித்து, சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.