(எம்.நியூட்டன்)
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை அனைவரும் எவ்வித தயக்கமும் இன்றி பயன்படுத்த வேண்டும். எவரும் தேர்தலை புறக்கணிக்கக்கூடாது என்று நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அவர்மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தேர்தலில் வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமையாகும். அந்தக் கடமையையும் பொறுப்பையும் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.
தேர்தலில் தங்களின் ஜனநாயகக் கடமையான வாக்களித்தலை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். ஒவ்வொருவரும் தங்களின் வாக்குரிமையினை பயன்படுத்த வேண்டும்.
வாக்களிப்பது என்பது நமது புனிதமான கடமையாகும். வாக்களிக்கும் உரிமையை அனைவரும் எவ்வித தயக்கமும் இன்றி பயன்படுத்த வேண்டும். தேர்தல் தினத்தன்று வாக்குரிமை பெற்ற அனைவரும் மாலைநேரம் வரை காலம் தாழ்த்தாது நேரகாலத்துடன் வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று உங்கள் வாக்குகளை பயனுள்ளதாக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM