வடமாகாண பெண்­களும் அவர்­க­ளது தேவை­களும்

Published By: Priyatharshan

15 Nov, 2019 | 02:30 PM
image

இலங்­கையில் இடம் பெற்ற 30 வருட போர் நேர­டி­யாக பல்­வே­று­பட்ட பொரு­ளா­தார, அர­சியல் மாற்­றங்கள் மற்றும் சமய சமூக பிரச்­சி­னை­களை தோற்­று­வித்­தது. யுத்­தத்தின் அதி­யுச்ச பாதிப்பை தன்­ன­கத்தே கொண்ட வடக்கு கிழக்கு பகு­தி­களில் யுத்­தத்தின் பின்னர் பாரிய அளவு இல்­லா­விட்­டாலும் ஒரு அள­விற்கு யுத்­தத்தின் வடுக்­களை குறைப்­ப­தற்­கான அபி­வி­ருத்தி செயற்­பா­டுகள் இடம் பெற்­றாலும் வடக்கு கிழக்கு பகு­தியில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் உள ரீதி­யான பாதிப்பு இது­வரை சரி செய்­யப்­பட முடி­யா­த­தா­கவே காணப்­ப­டு­கின்­றது.

மனி­தர்­க­ளா­கிய நாம் ஏதேனும் பிரச்­சி­னை­க­ளுக்கு அல்­லது கசப்­பான சம்­ப­வங்­க­ளுக்கு முகங்­கொ­டுக்கும் போது நாம் அனை­வரும் உள­வியல் ரீதி­யான பிரச்­சி­னை­க­ளுக்கு ஏதோ ஒரு வகையில் ஆளா­கின்றோம். இருப்­பினும் அதன் தாக்­கங்கள் அல்­லது வெளிப்­பா­டுகள் ஒரு­வ­ருக்­கொ­ருவர் வேறு­பட்டு காணப்­படும். சிலர் அதனை மன­த­ளவில் சகித்­துக்­கொள்­வார்கள் மற்றும் சிலர் நெருங்­கி­ய­வர்­களின் உத­வியை நாடிச் செல்­வார்கள் இன்னும் சிலர் முறை­யான ஆலோ­ச­னைகள் மூலம் குறித்த வடு­வி­லி­ருந்து மீள முயற்சி செய்­வார்கள்.

நேர­டி­யாக யுத்­தமும் பின்னர் உரு­வாக்­கப்­பட்ட சூழ்­நி­லையும் வட மாகாண பெண்கள் மத்­தியில் பாரிய அள­வி­லான உள­நல பாதிப்­புக்கு வித்­திட்­டது என்­பது உண்­மை­யாகும். யுத்­தத்­திற்கு பின்னர் வடக்கு கிழக்கு பகு­தியில் நிறைய  பெண்கள் வித­வை­க­ளா­கவும் பெண் தலை­மைத்­துவ குடும்­பங்­க­ளா­கவும்  குடும்ப பொறுப்­புக்­களை சுமக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. பெரும்­பா­லான பெண்கள் நேர­டி­யாக காணாமல் ஆக்­கப்­பட்ட தங்கள் பிள்­ளை­களை, கண­வனை, சகோ­த­ரனை தேடி தேடி பல்­வேறு கட்ட போராட்­டங்­களை முன்­னெ­டுத்து உள ரீதியில் பாதிக்­கப்­பட்டு தங்கள் வாழ்க்­கையை பல கஷ்­டங்­க­ளுக்கு மத்­தியில் கொண்டு செல்­கின்­றனர்.

இது ஒரு புறம் இருக்க யுத்த பாதிப்பில் இருந்து தங்கள் குடும்­பங்­களை மீள் உரு­வாக்கம் செய்ய வேண்டும் என அனேக பெண் தலை­மைத்­துவ குடும்ப பெண்கள் நுண்­நிதி நிறு­வ­னங்­க­ளிடம் நேர­டி­யாக கட­னா­ளி­யாகி உள்­ளனர். இவற்­றுக்கு நேர­டி­யாக நுண்­நிதி கடன்­வ­ழங்கும் நிறு­வ­னங்­களை குறை­கூற முடி­யாது. பல குடும்­பங்கள் குறித்த நுண்­நிதி கடன்­களை பெற்று தமது வாழ்­வா­தா­ரத்தை முறை­யாக கையாண்டு முன்­னேறி வரு­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­கதே. ஆனால் இங்கு காணப்­படும் பிர­தான பிரச்­சினை யாதெனின் குறித்த பெண்­க­ளுக்­கான வாழ்­வா­தார மேம்­பாட்டு திட்­டங்கள் தொடர்ந்தும் நடை­பெற்று வந்­தாலும் தேவை­ய­டிப்­ப­டையில் பட்­டி­ய­லிடும் போது அவ்­வ­கை­யான மேம்­பாட்டு திட்­டங்­கள் தேவை­யினை விடவும் மிக குறை­வா­கவே காணப்­ப­டு­கின்­றன.

அதேபோல் அதி­க­மான குடும்­பங்­களின் வரு­மா­னத்தை விட அவர்­க­ளது செல­வுகள் அதி­க­மாக காணப்­ப­டு­வது, வீண்­வி­ரயம் மற்றும் வரவு செல­வு­களை முறை­யாக கையாள முடி­யாமை போன்ற கார­ணங்­க­ளி­னாலும் பெண் தலை­மைத்­துவ குடும்­பங்கள் நுண்­நிதி கடன்­களை மேல­திக சுமை­க­ளாக சுமக்­க­வேண்­டிய நிலை உரு­வா­கின்­றது. இவ்­வாறு அதி­க­ள­வான குடும்ப சுமை கார­ண­மாக ஏற்­ப­டு­கின்ற உள­நல ரீதி­யான பிரச்­சி­னை­க­ளுக்கு முறை­யாக சிகிச்­சைகள் பெறா­விடின் குறித்த உள­நல பிரச்­சி­னைகள் அவர்­களை தற்­கொலை போன்ற தவ­றான முடி­வு­களை மேற்­கொள்ள வழி­வ­குக்­கின்­றது. இவ்­வா­றான நிலையில் அவர்­களை நம்­பி­யுள்ள குடும்­பத்தின் நிலைமை கேள்விக் குறி­யா­கின்­றது.

இவ்­வா­றான உள­நல ரீதி­யான பிரச்­சி­னை­களை வடக்கு கிழக்கு பெண்கள் அனு­ப­வித்து வரு­கின்ற நிலையில் அர­சாங்கம் முறை­யான ஒரு அர­சியல் சமூக பொரு­ளா­தர சாசன செயற்­றிட்­டத்­தினை மேற்­கொள்­கின்ற போது இவர்­க­ளுக்­கான விசேட அவ­தா­னிப்­புக்­களை உள்­ள­டக்­கு­வது பொருத்­த­மாக காணப்­படும் என்­பது உண்­மை­யாகும்

குறிப்­பாக பெண் தலை­மைத்­துவ குடும்­பங்­க­ளுக்கு என விசேட தொழில் பயிற்­சிகள், சந்­தைப்­ப­டுத்தல் வச­திகள் என அனைத்தும் உரிய முறையில் உரு­வாக்­கப்­பட வேண்டும். மேலும் வாழ்­வா­தார உத­விகள், அர­ச­க­ட­னு­த­விகள் என்­பன வழங்­கப்­படும் போது பெண்­த­லை­மைத்­துவ குடும்­பங்கள் நேர­டி­யாக பயன்­பெ­று­வ­துடன் நுண்­நிதி நிறு­வ­னங்­களின் கடன்­ சு­மைக்குள் சிக்­காது பாது­காக்­கப்­ப­டு­வார்கள். அதே நேரத்தில் இளம் வித­வைகள் விட­யங்­களில் அவர்­க­ளுக்­கான அரச வேலை­வாய்ப்­புக்­களை அல்­லது மீள் வாழ்தல் நிலையை உரு­வாக்க வழி ஏற்­ப­டுத்தல் மற்றும் அவர்­க­ளது பிள்­ளை­க­ளுக்­கான கல்வி, பாது­காப்பு மற்றும் ஏனைய அத்­தி­ய­ாவ­சிய தேவை­களை நிறை­வேற்­றிக்­கொள்ள வழி­வ­குத்தல் என்­பன அவர்­க­ளது பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு வழி­வ­குக்கும் அதே­வேளை அவர்­களின் உள­நல மேம்­பாட்­டுக்கும் உறு­து­ணையாய் அமையும்.

அதே நேரத்தில் காணாமல் ஆக்­கப்­பட்­டவர் விட­யம்,  யுத்த விசா­ர­ணை, அங்­க­வீனம் உற்ற பெண்கள் விடயம் தொடர்­பாக அர­சாங்கம் உண்­மை­யான பதிலை வழங்­கு­வதே வடக்கு கிழக்கு பெண்­களின் உள­நல ரீதி­யான பிரச்­சி­னை­களை குறைப்­ப­தற்­கான சிறந்த வழி­யாகும்.

ஓர் பிரச்­சினை அல்­லது மன­வடு சார் அனு­ப­வத்­தினை எதிர்­கொண்ட ஒரு­வரின் உள­நலம் பாதிக்­கப்­ப­டு­வது இயல்­பான விட­ய­மாகும். அத­ன­டிப்­ப­டையில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட பெண்கள், சிறு­வர்­களின் உள­நல மேம்­பாட்­டுக்­காக உளநல ஆலோசகர்கள் மற்றும் உளவள உத்தியோகத்தர்கள் போதுமான அளவு பணியில் அமர்த்துதல் அவர்களுக்கான வாழக்கை மேம்பாட்டுக்கு பயிற்சிகளை மேற்கொள்வதற்கு சிறப்பாக அமையும் என நம்புகின்றேன்.

இக்கட்டுரையானது குடும்ப புனர்வாழ்வு நிலையம் ; (FRC) மற்றும் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் ; (SDJF) இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் உளநல வாழ்வினை பாதிக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மேற்கொள்ளும் உளநல விழிப்புணர்வு செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக எழுதப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

– ஜோசப் நயன் –

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22