கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களிற்கு வாக்களிப்பு பெட்டிகள் உள்ளிட்டவை பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டுள்ளன. 

இன்று காலை 7.45 மணிமுதல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல்கள் அலுவலகத்திலிருந்து தேர்தல் வாக்குச் சீட்டுக்கள், வாக்குப் பெட்டிகள் அவ்வந்த வாக்களிப்பு  நிலைய அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டுள்ளன. 

கிளிநொச்சி மாவட்டத்தில் 100 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில்,நாளை 16 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணி முதல் பிற்பகல் 5 மணிவரை வாக்களிக்க முடியும் எனவும், நேரகாலத்தோடு வாக்களிக்க மக்கள் வாக்களிப்பு நிலையங்களிற்கு செல்லுமாறும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், அரசாங்க அதிபரும் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.