நாட்டின் 8 ஆவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் நாளை சனிக்கிழமை ( 16-11-2019 ) நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பதுளை மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து பதுளை மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் இன்று காலை ஆரம்பமாகின.

பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள் பரிசீலனை செய்யப்பட்டு வாக்குப்பெட்டிகள் பதுளை மாவட்டத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டன.