8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாளை  இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக வவுனியா மாவட்ட செயலகத்தில் இருந்து அனைத்து வாக்குச்சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் 142 வாக்களிப்பு நிலையங்களில் 117,333 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில்  மாவட்ட செயலகத்தில் இருந்து  பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டுள்ளன. 

தேர்தல் கடமைகளை இலகுபடுத்தும் முகமாக வவுனியா மாவட்ட செயலக வாயிலின் முன்பகுதியில் பிரிவுகளுக்கான வரைபடமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதேவேளை தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதனை காணக்கூடியதாக உள்ளதுடன் வன்முறைகளை கண்காணிப்பதற்காக இரகசிய கமராக்களுடன் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.