ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களும் தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என்று இந்துக் குருமார் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அமைப்பின் தலைவர் வைத்தீஸ்வரக்குருக்கள் இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது,

அன்பார்ந்த தமிழ் மக்களே எம் அனைவருக்கும் வாக்குரிமை என்பது எமது வாழ்வுரிமையாகும். இதனை நாம் எமது சமுதாய கடமையாக எண்ணி செயற்பட வேண்டும்.

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் எமது உரிமையை செம்மையாக பயன்படுத்த வேண்டும். எமதும் சமுதாயத்தினதும் உரிமை கருதி செல்லுப்படியாகக்கூடிய வண்ணம் எமது வாழ்வுரிமையை தவறாது கண்டிப்பாக பயன்படுத்தி பயன்பெறுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.