அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உயர்தரப்பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

லொஸ்ஏஞ்சல்சிற்கு வடக்கே உள்ள சன்டா கிளரிட்டாவின் சவுகஸ் உயர் தரப்பாடசாலையிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை ஆரம்பமாவதற்கு சற்று முன்னர் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

கறுப்பு உடையணிந்த ஆசிய நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் துப்பாக்கிபிரயோகத்தில் ஈடுபட்டார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

15 வயது மாணவனே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டான் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகாரிகள் உடனடியாக பாடசாலைக்குள் நுழைவதையும் காயமடைந்தவர்கள் அம்புலன்ஸ் மூலம் வெளியேற்றப்படுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

சந்தேகநபரை தேடி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதால் மக்களை வீடுகளை பூட்டி பாதுகாப்பாகயிருக்குமாறு கேட்டுள்ள அதிகாரிகள் அருகிலுள்ள பாடசாலைகளை உடனடியாக மூடியுள்ளனர்.