(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இம்முறை நடைபெறவுள்ள தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைகள் குறைவாகவே பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது 4 கொலை சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. 

எனினும் இம்முறை அவ்வாறு கொலை சம்பவங்களோ அல்லது பாரிய வன்முறைகளோ பதிவாகவில்லை என்றும் பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. 

கொலை, கூரிய ஆயுதத்தில் தாக்கி காயப்படுத்தல், தாக்குதல், கடத்தல், குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல், சொத்துக்களை சேதப்படுத்தல் மற்றும் அரசியல் கட்சி காரியாலயங்களை சேதப்படுத்தல் போன்ற பாரிய வன்முறை சம்பவங்கள் இம்முறை குறைவடைந்துள்ளன. 

மேற்கூறிய குற்றங்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 502 உம், 2015 ஆம் ஆண்டு 190 உம், இவ்வருடம் 68 உம் பதிவாகியுள்ளன. 

இது தொடர்பாக பெப்ரல் அமைப்பினால் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.