நாட்டில் கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக 29 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஒருவரும்  சப்ரகமுவ மாகாணத்தில் 28 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் நாடளாவிய ரீதியில் 100க்கும் அதிகமான பாடசாலைகள் முற்று முழுதாக சேதமடைந்துள்ளன. குறித்த பாடசாலைகளை புனர் நிர்மாணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.