தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவுபெற்றவுடன் ஆரம்பிக்கின்ற 'மௌன காலப்பகுதி' இம்முறை மிகவும் அமைதியான முறையில் காணப்படுகின்றது.
இந்த மௌன காலப்பகுதியிலும் தேர்தல் தினத்திலும் வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்கப்படுகின்றதா என்பதை அவதானிக்க, இம்முறை கஃபே அமைப்பு தமது நடவடிக்கையை விஸ்தரித்துள்ளது.
இரத்தினபுரியில் இன்று (14.11.2019) நடைபெற்ற கஃபே அமைப்பின் செயலமர்வில், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இதனைத் தெரிவித்தார். இச்செயலமர்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது
''தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை கஃபே அமைப்பிற்கு 735 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் மௌன காலப்பதியானது மிகவும் அமைதியான முறையில் காணப்படுவதை அவதானிக்கக்கூடியவாறு உள்ளது. மௌன காலப்பகுதியில் எட்டு முறைப்பாடுகள் மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளன. தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட பதாதைகள், சுவரொட்டிகள் போன்றவை இதுவரை அகற்றப்படாமல் இருப்பது தொடர்பாகவே குறித்த எட்டு முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றன.
தேர்தல் அண்மிக்கின்ற இந்த மௌன காலப்பகுதியிலும் தேர்தல் தினத்திலுமே வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்கும் செயற்பாடுகள் கடந்த காலங்களில் இடம்பெற்றன. இதற்கு முன்னரான தேர்தல்களில், இக்காலப்பகுதியிலேயே இலஞ்சம் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அவற்றைக் கருத்திற்கொண்டு இம்முறை கஃபே அமைப்பானது, நீண்டகால மற்றும் குறுங்கால கண்காணிப்பாளர்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இந்த காலப்பகுதியில் மொத்தமாக 2200 நடமாடும் கண்காணிப்பாளர்களை கஃபே அமைப்பானது நாடு முழுவதும் நியமித்துள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM