(ஆர்.விதுஷா)

இலங்கையில்  நீரழிவு  நோயால் பாதிப்புக்குளாகின்றவர்களின் வீதம்   அதிகரித்து செல்வதனை காணக்கூடியதாகவுள்ளது.  

அந்த வகையில்  கடந்த 2005   தொடக்கம் 2015 வரையான  காலப்பகுதியில்  நீரிழிவுநோயினால் பாதிப்புக்குள்ளாபவர்களின் எண்ணிக்கை  15  வீதத்தினால்  அதிகரித்திருந்தது.  

ஆயினும்   இது வரையான  காலப்பகுதியில்  நீரிழிவு  நோயினால்  பாதிப்புக்குள்ளாபவர்களின்  எண்ணிக்கை  அண்ணளவாக  24  சதவீதத்திற்கு     அதிகரித்த  மட்டத்தில்  செல்வதாக  மதிப்பிடப்பட்டுள்ளது.  

உலக நீரிழிவு  தினத்தை முன்னிட்டு  சுகாதார  அமைச்சின்  தொற்றாத  நோய்ப்பிரிவின்   விசேட  வைத்தியர்களும்  ,   லயன்ஸ்  கழகத்தினரும் இணைந்து ஏற்பாடு  செய்திருந்த  விசேட  ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை   சுகாதார  மேம்பாட்டு பணியகத்தில்  இடம்  பெற்றது.  

2016  ஆம் ஆண்டளவில் நாடளாவிய  ரீதியில்  மேற்கொள்ளப்பட்ட  ஆய்வின் பிரகாரம்  10  பேரில் ஒருவர் நீரிழிவு  நோய்தாக்கத்திற்கு  உள்ளாகியிருந்தனர். அந்த காலப்பகுதியில்  கொழும்பு    மாவட்டத்தை  எடுத்துக்கொண்டால்    6  பேரில்  ஒருவர்   அந்த  நோய்  தாக்கத்திற்கு  உள்ளாகியிருந்தார்

இந்நிலையில்  கடந்த  2018  இல்  மேற்கொண்டிருந்த ஆய்விற்கு  அமைய நீரிழிவு  நோய்  தாக்கத்திற்கு  உள்ளாகின்றவர்களின்  எண்ணிக்கை  சுமார்    24  வீதத்தினால்   அதிகரித்தமையை  காணக்கூடியதாகவிருந்ததுடன்,     அந்த காலக்கட்டத்தில் கொழும்பு  மாவட்டத்தில்  மாத்திரம்  நான்கு  பேரில்  ஒருவர்   நீரிழிவு  நோய்த்தாக்கத்திற்கு  உள்ளாகியிருந்தார்.

அந்த  வகையில்  கடந்த இரு  வருடங்களில்  மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம்   யாழ்ப்பாண  மாவட்டத்தில்  மாத்திரம்  சுமார்  20 வீதத்தினால் நீரிழிவு  நோயினால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை   அதிகரித்தமையை  காணக்கூடியதாகவிருந்தது.  

அதில்  கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது  விசேட  வைத்திய  நிபுணர்     பிரசாத்  கட்டுலந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.