Published by T. Saranya on 2019-11-14 16:07:25
(லியோ நிரோஷ தர்ஷன்)
மில்லேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் உண்மைக்கு முரணான போலி செய்திகள் இலங்கையில் காணப்படுவதையிட்டு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஹெய்டி நாட்டில் மில்லேனியம் சவால் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றது. அவ்வாறனதொரு அமெரிக்க திட்டம் ஹெய்டியில் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை , மில்லேனியம் சவால்கள் ஒப்பந்தத்தில் காணப்படுகின்ற சில முக்கிய திட்டங்கள் குறித்தும் அமெரிக்க தூதரகம் விளக்கியுள்ளது.