சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 168’ படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார்.'

பேட்ட, தர்பார் ஆகிய படங்களை தொடர்ந்து சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கும் பெயரிடப்படாத படத்தை சிவா இயக்குகிறார். இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

விஸ்வாசம், நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களை தொடர்ந்து டி இமான் இசையமைக்கும் பெரிய பட்ஜட் படம் இது என்பதும், கிராமப்புறங்களில் விஸ்வாசம் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை படத்தின் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பை பொருத்தும் டி இமானுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பதாக திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதனிடையே இந்த ஆண்டு இவரது இசையில் விஸ்வாசம், கென்னடி கிளப், பக்ரீத், நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படத்தின் பாடல்கள் வெளியாகி, இணைய தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.