இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்ஒருவர் குறித்து நூலொன்றை  வெளியிட்ட ஊடகவியலாளர்  ஒருவர் இனந்தெரியாதவர்களின் கத்திக்குத்து தாக்குதலிற்கு உள்ளாகி காயமடைந்துள்ளார்.

வீணடிக்கப்பட்ட அபிவிருத்தியும் ஊழலும் என்ற நூலை வெளியிட்டு  தேர்தலில் போட்டியிடும் மற்றொரு வேட்பாளரிற்கு வழங்கிய லசந்த விஜயரட்ண என்ற சுயாதீனஊடகவியலாளரே இன்று இனந்தெரியதாவர்களின் கத்திக்குத்திற்கு இலக்காகியுள்ளார்.

அவரது வீட்டிற்குள் நுழைந்த நால்வர் மனைவியின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியப pன்னர் கத்திக்குத்தினை மேற்கொண்டனர் என விஜயரட்ணவின் சட்டத்தரணி  தெரிவித்துள்ளார்.

அவர்கள் வீட்டின் தளபாடங்களை அடித்து நொருக்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறினர் எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வெற்றிவாய்ப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில்  ஊடகவியலாளர் செயற்பட்டார் என தாக்குதலை மேற்கொண்டவர்கள் குற்றம்சாட்டினார்கள் என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற இந்தn சம்பவம் குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை  இந்த தாக்குதல் குறித்து  தகவல்கிடைத்துள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் அறிவித்துள்ளது.