ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி உலக சர்க்கரை நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது/

இந்த ஆண்டு உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, ‘நீரிழிவு பாதிப்பிலிருந்து உங்கள் குடும்பத்தை பாதுகாத்திடுங்கள்’ என்ற மையக்கருத்தை உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இன்றைய திகதியில் உலகம் முழுவதும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து ஆண்டுதோறும் 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாழ்நாள் முழுவதும் இத்தகைய குறைபாடு தொடரும் என்பதால், எதிர்கால சந்ததியினர் இத்தகைய பாதிப்பு ஏற்படாத வகையில் நாம் முழுமையான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதிலும் டைப்-2 எனப்படும் சர்க்கரை நோய் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவில்லை என்றால் கண், இதயம், சிறுநீரகம், கால் மற்றும் பாதங்கள் ஆகியவை பாதிப்படையும். அத்துடன் உயிரிழப்பையும் ஏற்படுத்தும். இதன் காரணமாக சர்க்கரை நோயை தொடக்கத்திலே கண்டறிந்து, அதனை கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சையை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். 

அத்துடன் சரி சம விகித சத்துணவு, உடற்பயிற்சி ,உடல் எடையை சீராக பராமரித்தல், நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனை செய்து, மருத்துவரின் ஆலோசனை பெறுதல்... ஆகியவற்றை தொடர்ந்து பின்பற்றினால், சர்க்கரை நோயின் பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்ளலாம்.

டொக்டர் மோகன்

தொகுப்பு அனுஷா.