வவுனியாவில் கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து நேற்று 13ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 140 பேருக்கு டெங்குத் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதனுள் ஆறு பாடசாலை மாணவர்களும் ஒரு ஆசிரியரும் அடங்குவதாகவும் பிரபல்யமான பாடசாலை ஒன்றிலிருந்து டெங்கு நுளம்பு உருவாகும் குடம்பிகள் பூச்சியியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதாரத்திணைக்களம் அறிவித்துள்ளது.

வவுனியாவில் கடந்த செப்டெம்பர் மாதம் முற்பகுதியிலிருந்து நவம்பர் 13ஆம் திகதி நேற்றுவரையான காலப்பகுதி வரையும் 140பேருக்கு டெங்கு நுளம்புத் தொற்று ஏற்பட்டு வைத்திய சிகிச்சை பெற்றுக்கொண்டுள்ளதாக சுகாதாரத்திணைகளத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் வவுனியாவிலுள்ள பிரபல்யமான பாடசாலை ஒன்றில் ஆறு மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியரும் அடங்குகின்றனர். நேற்றையதினம் மட்டும் 18பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். இது வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருக்கெடுத்துள்ளதை மேலும் உணர்த்தியுள்ளது. 

வவுனியா நகரம், இறம்பைக்குளம், சூசைப்பிள்ளையார்குளம், ராணி மில் வீதி, வைரவபுளியங்குளம் போன்ற பகுதிகளில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் டெங்கு நுளம்பு பெரும் இடங்கள் அவதானிக்கப்பட்டு அதற்கு எதிரான நடவடிக்கைகள் பொது சுகாதாரப்பரிசோதகர்களினால் களப்பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளன. 

நுளம்பு பெருகும் இடங்கள் அவதானிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் இவ் அறிவித்தலை பொது அறிவித்தலாக கருதி தமது இருப்பிடங்களை துப்பரவு செய்து நுளம்பு பெருகும் இடங்களை அழிக்கும் நடவடிக்கைக்கு பூரண உத்துழைப்புக்களை வழங்குமாறு கேட்டுக்கொள்வதாக வவுனியா சுகாதாரத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.