(ப.பன்னீர்செல்வம்)

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவி கிடைப்பது தொடர்பில்  " கனவில் கூட நான் நினைக்கவில்லை" எனத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, எதிர்காலத்தில் அவ்வாறானதொரு பதவி கிடைக்கும் என்பது தொடர்பில் எதனையும் கூற முடியாது. ஏனென்றால்   நான் மை வெளிச்சம் பார்ப்பவன் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். 

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாந்தோட்டை அமைப்பாளர் பதவி கிடைக்கப் போவதாக வெ ளியான  செய்தி தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 

இணையத்தளங்களில் பல்வேறு செய்திகள் வெ ளிவரும் அவை அனைத்தும் உண்மையில்லை. அதேபோன்றுதான் எனக்கு அம்பாந்தோட்டை சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவி கிடைக்கப் போவதாக வெளியான செய்தியில் எதுவும் உண்மையில்லை. 

சிலர் இவ்வாறான பொய்யான செய்திகளை வெளியிட்டு சந்தோஷமடைகின்றனர். நான் கனவில்கூட சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவி கிடைப்பதை நினைக்கவில்லையென்றும் மேர்வின் சில்வா தெரிவித்தார்.