அம்புகளும் வில்லுகளும் பண்டைய புராண கால மோதல்களின் போது பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் என்பது பலரதும் கருத்தாகவுள்ளது.

ஆனால் ஹொங்கொங் நகரில் நேற்று புதன்கிழமை  சீன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் குழுவினர் அந்தக் கருத்து தவறு என்பதை நிரூபிக்கும் வகையில் புதுவித தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர்.

அவர்கள் தீப்பந்தமாக கொழுந்து விட்டு எரியச்செய்யப்பட்ட அம்புகளை வில்லுகள் மூலம் ஏவி அந்நகரிலிருந்த சீனப் பல்கலைக்கழகமொன்றின் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில்   அருகி லிருந்த புகையிரதமொன்று தீப்பற்றி எரிந்துள்ளது.