(இரா.செல்­வ­ராஜா)

பாத­ணிக்குள்  மறைத்து தங்கம் கடத்த முயன்ற உக்ரைன் நாட்டுப் பெண்­ம­ணி­யொ­ரு­வரை மடக்கிப் பிடித்த கட்­டுநா­யக்க விமான நிலைய சுங்க அதி­கா­ரிகள் சந்­தேக நப­ரி­ட­மி­ருந்து  2 கோடி பெறு­ம­தி­யான தங்க பிஸ்­கட்­டு­களை மீட்­­டுள்­ளனர்.



இந்­தி­யாவில் இருந்து கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­திற்கு நேற்று வந்­த­டைந்த உக்ரைன் பெண்­மணி ஒரு­வ­ரிடம் இருந்தே  இந்த  தங்க பிஸ்­கட்­டுகள் மீட்­கப்­பட்­ட­தாக சுங்க திணைக்­கள அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.

இரண்டு கிலோ 320 கிராம் எடை­யு ள்ள தங்க பிஸ்­கட்­டுகள் பாதணி ஒன்­றுக்குள் 10 வீதம் மறைத்து வைத்­தி­ருந்த­தாக  தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.