(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்­றுக்­கொண்டு காணாமல் ஆக்­கிய சம்­பவம் தொடர்பில் முன்னாள் கடற்­படை தள­பதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்­னா­கொட சட்­டத்தின் முன் சிறப்பு சலுகை பெற்­ற­வ­ராக இருந்­துள்ளார்.

இந்த  தவறை திருத்தும் முக­மா­க­வேனும் அவரை நீதி­மன்­றுக்கு அழைக்கும் அழைப்­பாணை ஒன்­றினை அச்­ச­மற்ற நீதிவான் என்ற வகையில் பிறப்­பிக்க வேண்டும்' என சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நேற்று கோட்டை நீதி­மன்றில் கோரினார்.

எவ்­வா­றா­யினும் கரன்­னா­கொ­டவை கைது செய்­வதை உயர் நீதி­மன்றம் தடுத்­தி­ருந்த நிலையில், அந்த தடை உத்­தரவை மீறி தன்னால் செயற்­பட முடி­யாது என சுட்­டிக்­காட்­டிய நீதிவான்,  அவரை நீதி­மன்­றுக்கு அழைப்­பாணை ஊடாக இந்த சந்­தர்ப்­பத்தில் அழைக்க சட்­டத்தில் நேர­டி­யாக எந்த வச­தி­களும் இல்லை என்­பதால் அக்­கோ­ரிக்­கையை  நிரா­க­ரிப்­ப­தாக அறி­வித்தார். எனினும் குற்றப் பத்­தி­ரி­கையை கைய­ளிக்க வசந்த கரன்­னா­கொ­டவை மேல் நீதி­மன்­றுக்கு அழைக்கும் போது அவ­ருக்கு எதி­ராக அச்­ச­மற்ற தீர்­மானம் ஒன்­றினை எடுக்க முடியும் எனவும் அந்த பொறுப்பை மேல் நீதி­மன்­றத்­தி­டமே விடு­வது சிறந்­தது என தான் கரு­து­வ­தா­கவும் கோட்டை  நீதிவான் சுட்­டிக்­காட்­டினார்.

இத­னி­டையே, கொழும்பில் 5 மாணவர் உள்­ளிட்ட 11 இளை­ஞர்கள் கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்பில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்ள கடற்­படை உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக தேவை­யான ஒழுக்­காற்று நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கு­மாறு சட்ட மா அதிபர் தப்­புல டி லிவேரா விஷேட ஆலோ­ச­னை­களை வழங்­கி­யுள்­ள­தாக பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் நேற்று அறி­வித்தார்.

பாது­காப்பு செய­லாளர் மற்றும் கடற்­படைத் தள­பதி ஆகி­யோ­ருக்கு இந்த ஆலோ­சனை நேற்று வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்  தெரி­வித்தார்.இந்த விவ­காரம் குறித்த நீதிவான் நீதி­மன்ற விசா­ர­ணைகள் நேற்று கோட்டை நீதி­மன்றில் இடம்­பெற்­றது.இதன்­போது குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சார்பில் விசா­ரணை அதி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா ஆஜ­ரா­ன­துடன், அவர் விசா­ர­ணைகள் நிறைவு பெற்­றுள்­ள­தாக அறிக்­கை­யினை ஏற்­க­னவே சமர்ப்­பித்­துள்ள நிலையில் சந்­தேகநபர்கள்  சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ரசிக பால­சூ­ரிய உள்­ளிட்ட சட்­டத்­த­ர­ணிகள் குழு­வினர் ஆஜ­ரா­கினர்.சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸும் பாதிக்­கப்பட்ட தரப்பு சார்பில் சட்­டத்­த­ரணி அச்­சலா சென­வி­ரத்­னவும் ஆஜ­ரா­கினர்.

 இந் நிலையில் மன்றில் ஆஜ­ரா­கிய  சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்,

'இந்த விவ­கா­ரத்தில் நீதிவான் நீதிமன்றைப் பொறுத்­த­வரை கைதானோர் 17 பேர். அதில் 14 பேருக்கு எதி­ராக சட்ட மா அதிபர் 667 குற்றச் சாட்­டுக்­களின் கீழ் மேல் நீதி­மன்றில் குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­துள்ளார். அந்த குற்­றச்­சாட்­டுக்­களை விசா­ரிக்க மூவர் கொண்ட ட்ரயல் அட்பார் ஒன்­றினை நிறு­வவும் பிர­தம நீதி­யர­ச­ரிடம் கோரிக்கை விடுத்­துள்ளார். அந்த வகையில் ஏற்­க­னவே 17ஆவது சந்­தேகநப­ரான உபுல் பண்­டா­ர­வுக்கு நிபந்­தனை மன்­னிப்­ப­ளித்து அவரை அரச சாட்­சி­யாக பயன்­ப­டுத்த தீர்­ம­ானிக்­கப்பட்­டுள்­ளது அந்த வகையில் மூன்­றா­வது சந்­தேகநபர் லக்ஷ்மன் உத­ய­கு­மார, 5 ஆவது சந்­தேகநபர் தம்­மிக தர்­ம­தாஸ ஆகி­யோ­ருக்கு நிபந்­தனை மன்­னிப்­ப­ளிக்க சட்ட மா அதிபர் தீர்­மா­னித்­துள்ளார். அது குறித்து அவர்­க­ளது விருப்­பத்தை பெற விஷேட விண்ணப்பம் வழங்­கப்ப­டு­வ­துடன் அதனை அவர்கள் பூர்த்தி செய்து இன்றே (நேற்று) சட்ட மா அதி­ப­ருக்கு வழங்க வேண்டும்.

 இதே­வேளை தற்­போது 14 பேரை பிர­தி­வா­தி­க­ளாக சட்ட மா அதிபர் கருதி குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­துள்ள பின்­ன­ணியில் அவர்­க­ளுக்­கு­ எ­தி­ராக மேல்  நீதி­மன்ற வழக்கின் ஆரம்­பத்தின் போது,  அவர்­க­ளது பிணை தொடர்பில் கடு­மை­யான நடவ­டிக்­கையை எடுக்க சட்ட மா அதிபர் தற்­போதும் தீர்­மா­னித்­துள்ளார்.

 விஷே­ட­மாக இங்கு முன்னாள் கடற்படை தள­பதி வசந்த கரன்னாெகாட இந்த சம்­ப­வத்தின் பிர­தான சந்­தேக நபர்­களில் ஒரு­வ­ராவார். அவ­ருக்கு படு­கொலை,  பலாத்­கா­ர­மாக சிறைப்­ப­டுத்தி வைத்­தி­ருந்­தமை உள்­ளிட்ட பிர­பல குற்­றச்­ச­ாட­்டுக்கள் உள்­ளன. இத­னை­விட அவ­ருக்கு எதி­ராக சாட்­சி­களை மறைத்­தமை தொடர்பில் விஷேட குற்­றச்­சாட்டும் உள்­ளது. அப்­ப­டிப்­பட்ட அவரை கைது செய்ய முடி­ய­வில்லை. அவர் உயர் நீதி­மன்றில் தாக்கல்  செய்த  அடிப்­படை உரிமை மீறல் மனுவில்  வழங்­கப்பட்ட,  அவரை கைது செய்­வ­தற்­கான தடை உத்­த­ரவால் அவரைக் கைது செய்ய முடி­ய­வில்லை. உயர் நீதி­மன்ற  உத்­தரவு பொலி­ஸா­ருக்­கா­னது. அப்­போது அவர் சந்­தேகநபர். எனினும் இப்­போது நிலைமை வேறு. அவர் பிர­தி­வாதி. அவ­ருக்கு எதி­ராக  செயற்­பட சட்ட மா அதி­ப­ருக்கு எந்த தடையும் இல்லை. அதனால் அவரை மன்றில் ஆஜ­ராக அழைப்­பாணை விடுக்­கவும்' என்றார். இதன்­போது நீதிவான் ரங்க திஸா­நா­யக்க, எந்த சட்டப் பிரிவின் கீழ் அவ­ருக்கு எதி­ராக அழைப்­பாணை விடுப்­பது என கேள்வி எழுப்­பினார்  அத்­துடன், 'உயர் நீதி­மன்றின் கைதை தடை செய்த உத்­த­ரவின் நோக்கம் அவர் கைதானால் விளக்­க­ம­றியலில் வைக்­கப்­ப­டுவார் என்­ப­தாகும். அப்­ப­டி­யானால்  நான் அழைப்­பாணை விடுத்து அவர் மன்­றுக்கு வந்­தாலும் அவரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­தரவி­டு­வதை தவிர எனக்கு வேறு உத்­தரவு கொடுக்க முடி­யாது. அப்­ப­டி­யானால் உயர் நீதி­மன்றின் தடை உத்­தரவை நான் வேறு ஒரு வகையில் மீறு­வ­தாக அது அமையும் அல்­லவா? என கேள்வி எழுப்­பினார்.இதற்கு பதி­ல­ளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ்,

ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் ஒவ்­வொரு வித­மாக சட்­டத்தை அமுல் செய்­வதால் இந்த பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது.  முன்­னாள் ­க­டற்­படைத் தள­பதி வசந்த கர­ன்னா­கொ­ட­வுக்கு மட்டும் சட்­டத்­துக்கு அப்பால் சென்று விஷேட சலு­கையை அனு­ப­விக்க சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­டு­வதை ஏற்க முடி­யாது என்றார்.இதன்­போது நீதிவான் அவரைக் கைது செய்ய விதிக்­கப்பட்ட  தடை உத்­தரவு  சட்­டத்­துக்கு உட்­பட்­டதே எனவும் அதை உயர் நீதிமன்றம் விடுத்துள்ளதையும் ஞாபகப்படுத்தினார்.எவ்வாறாயினும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்,  கரன்னாகொடவுக்கு மட்டும் சிறப்பு சலுகை இவ்வழக்கில் வழங்கப்பட்டுள்ளதாகவும், தவறான அந்த நடவடிக்கை திருத்தப்பட வேண்டும் என்பதற்காக அவரை மன்றுக்கு அழைக்குமாறும் கோரினார்.இந் நிலையிலேயே அவரை மன்றுக்கு அழைக்க சட்ட ஏற்பாடுகள் தற்போதைய சூழலில் இல்லை என்பதை சுட்டிக்காட்டி அக்கோரிக்கையை நீதிவான் நிராகரித்து, மேல் நீதிமன்றம் ஊடாக அதனை சரி செய்ய ஆலோசனை வழங்கினார்.