இத்­தா­லியின் வெனிஸ் நகரை கடந்த 50 வருட காலத்தில் இல்­லா­த­வாறு மிகவும் உய­ர­மான  கடல் அலை நேற்று முன்­தினம்  செவ்­வாய்க்­கி­ழமை இரவு தாக்­கி­யுள்­ளது.

இதனால் அந்­ந­கரின் பல பகு­திகள் கடல் நீரில் மூழ்­கி­யதால் இயல்பு வாழ்க்கை பாதி க்­கப்­பட்­டுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. இதன்­போது  நகரில் சில பிராந்­தி­யங்­களில் சுமார் 6 அடி (1.87 மீற்றர்) உய­ரத்­துக்கு கடல் அலை பிர­வே­சித்­துள்­ளது.

இந்த வெள்ள அனர்த்­தத்­திற்கு கால­நிலை மாற்­றமே காரணம் எனக் குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது. மேற்­படி வெள்ள அனர்த்­தத்­தை­ய­டுத்து வெனிஸ் நகர மேயர் லுயிகி புறுக்­னரோ அவ­ச­ர­கால நிலை­மை­யொன்றைப் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்ளார். 78 வயது நப­ரொ ­ருவர் தனது வீட்­டுக்குள் பிர­வே­சித்த கடல் நீரால் மின்­சா­ரத்தால் தாக்­குண்டு உயி­ரி­ழந்­துள்ளார். 1966 ஆம் ஆண்டில் தாக்­கிய  1.94 மீற்றர் உயர கடல் அலையே இதற்கு முன் னர் வெனிஸ் நகரை தாக்­கிய உய­ர­மான கடல் அலை­யா­க­வுள்­ளது.