ஜனாதிபதி தேர்தலில்  வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் வாக்காளர்களின் நலன்கருதி இன்று முதல் மேலதிக பஸ், ரயில் சேவைகளை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பிலிருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக இலங்கை போக்குவரத்து சபை இன்று முதல் மேலதிக பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பன்னிரண்டு மாகாணங்களிலிருந்து கொழும்புக்கு கூடுதல் பஸ்களை தேவைக்கேற்ப நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (18.11.2019) முதல், அனைத்து பஸ்களும் அனைத்து மாகாணங்களிலிருந்தும் இயக்கப்படும், மக்கள் மீண்டும் கொழும்புக்கு வருவதற்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  போக்குவரத்து ஆணைக் குழுவின் ஆலோசனைக்கு அமைய மேலதிக தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத் தப்படவிருப்பதாக மத்திய போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.